Categories
உலக செய்திகள்

கொரோனா வைரஸ் இருக்கிறதா?… செக்கப் செய்பவர்களுக்கு ரூ 10,000 பரிசு..!!

சீனாவில் கொரோனா வைரசை கண்டறிய தானாக வந்து பரிசோதிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 10,000 பரிசளிப்பதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 906 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40,000-த்திற்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொடிய கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு சீன அரசு தினமும் முடிந்த அளவுக்கு பல்வேறு நடவடிக்கைளை எடுத்து கொண்டு தான் வருகிறது. ஆனாலும் நாளுக்குநாள் பெரும்பாலான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றனர். இந்தநிலையில் கொரோனா பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமல் பரிசோதிப்பதற்கு அச்சப்படும் மக்களின் பயத்தை போக்குவதற்கு, தானாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ளும் மக்களுக்கு 1000 யுவான் (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 10,000 ரூபாய்) பரிசளிப்பதாக அந்நாட்டு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

image

கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த ஹூபே மாகாணத்தில் தான் சீன அரசு முதலில் இதை நடைமுறைப்படுத்தவுள்ளது. மேலும் காய்ச்சல் மற்றும் பிற நோய் அறிகுறிகளுடன் வந்து பரிசோதனை செய்பவர்களுக்கும் பரிசு தருவதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது .

Categories

Tech |