மகளை கொலை செய்த தம்பதியினருக்கு ஆயுள் தண்டனை விதித்த நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வாழைகுளம் தெருவில் இன்ஜினியரான முனீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இவர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது மகள் இருந்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆம் ஆண்டு குலதெய்வ கோவிலில் வைத்து தம்பதியினர் தங்களது மகளுக்கு பூச்சி மருந்தை கொடுத்துள்ளனர்.
இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முனீஸ்வரன் மற்றும் ரேவதி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மகிழா நீதிமன்றம் தம்பதியினருக்கு ஆயுள் தண்டனையும், 7 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.