தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு காதல் அழிவதில்லை எனும் படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வந்த சிம்பு இடையில் சில வருடங்களாக பல சிக்கல்களை சந்தித்துள்ளார். அவர் நடித்த படம் வெளியாகாமலும் வெளி ஆனாலும் வெற்றி பெறாமல் இருந்தன. மேலும் சில வழக்குகளும் சிம்பு மீது போடப்பட்டது. இதனை தொடர்ந்து உடல் எடை கூடி பல கடுமையான விமர்சனங்களை சிம்பு சந்தித்துள்ளார். சிம்பு என்ன தான் பல கடுமையான விமர்சனங்களை சந்தித்தாலும் அவரது ரசிகர்கள் அவரை கைவிடவில்லை. அதனால் அவர்களுக்கான மீண்டும் பழைய சிம்புவாக மாற அவர் முடிவு எடுத்துள்ளார்.
தன் உடல் எடையெல்லாம் குறைத்து ஸ்லிம்மாக மாறிய சிம்பு ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மெகா ஹிட் ஆனது. 100 கோடி வசூலித்த மாநாடு திரைப்படம் சிம்புவை மீண்டும் வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றது. இந்த சூழலில் மாநாடு வெற்றியின் மூலம் புது உத்வேகம் பெற்ற சிம்பு தற்போது பிஸியாக பல படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் சிம்பு நடித்து முடித்துள்ளார் இந்த படம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து கிருஷ்ணா இயக்கத்தில் பத்துதல படத்தில் நடித்து வருகின்றார்.
இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் கோகுல் இயக்கத்தில் கொரோனா குமார், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு படம், மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படம் என சிம்பு அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி வருகின்றார். இதனால் சிம்பு ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்து வருகின்றனர். தற்போது அவர்கள் மேலும் மகிழ்விக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாக இருக்கிறது குறிப்பிடத்தக்கதாகும். சிம்பு நடிகராக மட்டுமில்லாமல் பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் என பன்முக திறன் கொண்டவராக விளங்கி வருகின்றார். மன்மதன் படத்தில் கதை, திரைக்கதை எழுதி அசத்திய சிம்பு வல்லவன் படத்தின் மூலமாக இயக்குனர் ஆகியுள்ளார்.
இந்த இரு படங்களும் மெகா ஹிட் ஆகிய சிம்பு அதன் பின் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றார். ஆனால் அவரது ரசிகர்கள் இயக்குனர் சிம்புவை மீண்டும் காண ஆவலாக இருக்கின்றனர். இந்த சூழலில் சிம்பு தற்போது ஒரு கதையை முழுவதுமாக எழுதி முடித்திருப்பதாகவும் விரைவில் அந்த கதை இயக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க அதில் காதலை மையமாக வைத்து அந்த கதையை எழுதி இருக்கிறாராம். அதனால் சிம்புவின் 50 ஆவது படத்தை அவரே இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.