Categories
தேசிய செய்திகள்

எஸ்.எஸ்.எல்.வி டி1 ராக்கெட் மிஷன் தோல்வி…. இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!!

எஸ் எஸ் எல் வி டி1சிறிய ரக ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட இரண்டு செயற்கைக்கோளும் செயலிழந்து விட்டதாக இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. SSLV டி 1 ராக்கெட் ஏவிய இஓஎஸ் 02, ஆசாதி சாட்செயற்கைக்கோள்களை விண்ணில் சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த முடியவில்லை என்ற இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனால் இரண்டு 6666666666669செயற்கை கோள்களையும் பயன்படுத்த இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் இருந்து முன்னரே செயற்கைக்கோள்கள் வெளியேறியதால் நிலை நிறுத்த முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செயற்கை கோள்கள் வட்டப்பாதைக்கு பதிலாக நீள் வட்டப் பாதையில் நிறுத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்த செயற்கைக்கோள்களை மேற்கொண்டு பயன்படுத்த முடியாது என்று இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |