2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் அருகே லிங்கவாடி பகுதியில் டிவி மெக்கானிக்காக வேலைப்பார்த்து வந்த தங்கராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை இருக்கிறது. இதே பகுதியில் வசித்து வந்த உதயகுமாரும், தங்க ராஜாவும் சேர்ந்து ஒரு டீக்கடையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இவர்களை சமாதானம் செய்வதற்கு அப்பகுதி மக்கள் முயற்சி செய்தனர். ஆனால் தகராறு முற்றியதில் உதயகுமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்க ராஜாவை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். உடனே அப்பகுதி மக்கள் உதயகுமாரை பிடித்து தர்மஅடி கொடுத்துள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த உதயகுமாரை உறவினர்கள் மீது சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். ஆனாலும் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி உதயகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கிராம மக்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தங்க ராஜா மற்றும் உதயகுமார் கொலை செய்யப்பட்டதற்கான காரணத்தை விசாரணை செய்து வருவதோடு, அசம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்காக, பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.