Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தொடரும் பட்டாக்கத்தி கலாசாரம்… இரண்டு பேர் கைது..!!

திருவள்ளூர் அருகே சாலையை மறித்து பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் அடுத்த புன்னம்பக்கம் கிராமத்தைச் சேர்ந்த அஜித் குமார் நண்பர்களுடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்பொழுது புன்னம்பாக்கம் கிராமத்தின் முக்கிய சாலை நடுவில் கேக் வைத்து அதனை பட்டாக்கத்தியால் வெட்டி  கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த விடீயோக்கள் இணையதளத்தில் வைரலாக நிலையில் புன்னம்பாக்கம் காவல் துறையினர் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதில் அஜித் குமார், கலைவாணன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்திய போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |