தேவையான பொருட்கள்:
கொய்யாக்காய் துண்டுகள் – ஒரு கப்
வெந்தயம் – ஒரு தேக்கரண்டி
மிளகாய் வற்றல் பொடி – ஒரு தேக்கரண்டி
உப்பு – தேவைக்கேற்ற அளவு
நல்லெண்ணெய் – அரை கப்
கடுகு – அரை தேக்கரண்டி
பெருங்காயப்பொடி – சிறிதளவு
செய்முறை:
பழம் கண்டிப்பாக இருக்கக் கூடாது. காயாக இருக்கும் கொய்யாக்காஇன் நடுப்பகுதியில் இருக்கும் விதைகளை நீக்கவும். மீதி சதைப்பகுதியை சிறு துண்டுகளாக வெட்டவும். வெந்தயத்தை சிவக்க வறுத்து பொடியாக்கவும். மிளகாய் வற்றலை வறுத்து பொடியாக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி கடுகை வெடிக்க விடவும். அத்துடன் கொய்யாக்காய் துண்டுகளை சேர்த்து வதக்கவும். வெந்தயப் பொடி உப்பு பெருங்காயப் பொடி ஆகியவற்றை சேர்த்து கலந்து ஆறிய பிறகு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். கைபடாமல் பாதுகாக்கவும் சுவையான கொய்யா ஊறுகாய் தயார்.