விலைவாசி உயர்வு பற்றி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு முன்னாள் நிதியமைச்சர் பா. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் ஆங்கில நாளேடு ஒன்றில் விலைவாசி உயர்வு பற்றி நான் எழுப்பிய கேள்விகளுக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுவரை பதில் அளிக்கவில்லை. நிகழ்காலத்தை பற்றி பேசுவதை கூட வரலாற்றை ஆய்வு செய்வதில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராம் அதிக அக்கறை காட்டுபவராக இருக்கிறார். பண வீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் நாடாளுமன்ற உரையில் நிதி அமைச்சர் விளக்கம் அளிக்கவில்லை. மேலும் விலையேற்றம் மந்திரத்தால் நிகழ்ந்தது எனவும் மந்திரம் போன்று இறங்கிவிடும் எனவும் மத்திய அரசு நினைக்கிறது என்ன விமர்சித்துள்ளார்.
Categories