Categories
தேசிய செய்திகள்

“உள்ளூர் பொருட்களை பயன்படுத்த ஊக்குவிக்கவும்”….. பிரதமர் மோடி வேண்டுகோள்….!!!!

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அமைந்துள்ள கலாச்சார மையத்தின் நிதி ஆயோக்கின் ஏழாவது நிர்வாக கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பயிர்கள் பயிரிடுதல், பருப்புகள் மற்றும் இதர விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறைவு அடைதல் உள்ளிட்ட பல்வேறு விவாதங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்தை தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் புறக்கணித்தார். இதை குறித்து அவர் கூறியதாவது: “பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலை ஏற்றம், டாலருக்கு சமமான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல விஷயங்களில் நிதி ஆயோக் அமைப்பு எதுவும் செய்ய முடியவில்லை” என்று தெரிவித்தார்.

இந்நிலையில் நிதி ஆயோக் நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி ஜிஎஸ்டி வசூலை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கை தேவை. சுற்றுலா, வர்த்தகம் போன்றவற்றை மேம்படுத்துவதில் ஒவ்வொரு மாநிலமும் கவனம் செலுத்த வேண்டும். இறக்குமதியை குறைப்பது, ஏற்றுமதியை அதிகரிப்பது மற்றும் அதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண வேண்டும். உள்ளூர் பொருட்களை பயன்படுத்த மக்களுக்கு ஊக்குவிப்பு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

Categories

Tech |