புலி ஒன்று கறித்துண்டை அமைதியான முறையில் சாப்பிட்டு விட்டு செல்லும் வீடியோவானது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
ஒரு பேருந்து ஓட்டுனர் திடீரென வனப்பகுதிக்குள் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த ஒரு புலியை பேருந்து ஓட்டுனர் அழைத்து ஒரு குச்சியில் கறித்துண்டை கட்டி ஜன்னல் வழியாக புலியிடம் கொடுத்துள்ளார். அந்த புலியும் குச்சியில் மாட்டி இருந்த கறித்துண்டை அமைதியான முறையில் சாப்பிட்டு விட்டு அங்கிருந்து கிளம்பி சென்றது.
இதை பேருந்தில் இருந்த மற்றொரு நபர் வீடியோவாக எடுத்து தி அமேசிங் டைகர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில்வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/_u/the_amazing_tigers/?utm_source=ig_embed&ig_rid=1f33e4f1-8202-47eb-87ad-a8f0ee978f0c&ig_mid=0E0DF70F-6780-4AB9-B148-E7456A2BD46D