Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

பெண்களுக்கு நகங்கள் ”பொலிவுடன் நீளமாக வேண்டுமா” இதை ட்ரை பண்ணுங்க..!!

பொதுவாக பெண்கள் அனைவரும் பெரும்பாலும் தங்களது நகங்களை வளர்ப்பதில் ஆர்வம் அதிகம் . பலர் தங்களுக்கு நீண்ட நகங்கள் வளர்வதில்லை என்று கவலை படுவதுண்டு. அவ்வாறு கவலை கொள்ளும்  பெண்களுக்கு இந்த  குறிப்பு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்..!!

பெண்களில் சிலருக்கு நகங்களை கடித்து  துப்பும் கெட்ட பழக்கம் உண்டு. அவர்கள் நகங்களை எப்போதும் கடித்துக்கொண்டே  இருப்பார்கள். இதனால் சில  வகையான பாக்டீரியாக்களை அவர்கள் உட்கொள்ள நேரிடும் .  வாயின் வழியாக வயிற்றில் செல்வதன் மூலம் அது  நோய்வாய்ப்படுத்தும். உயிருக்கு தீங்கு விளைவிக்கும்.

 

Image result for நகங்களை

நாம் நகங்களை வளர்க்க தேங்காய் எண்ணெய் மிகவும்  பயண் உள்ளதாக இருக்கும். தேங்காய் எண்ணையை  பயன்படுத்துவதால் நகங்கள் ஈரப்பதமடையும்,  நகங்கள்  உடையாது. ஒரு சிறு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் எடுத்து அதில்  நகத்தினை மெதுவாக மசாஜ் செய்யவும். இது நகங்கள் வேகமாகஉம்  பொலிவாகவும் வளர உதவும்.

நகங்களை பொலிவுடன் வளர ஆலிவ் எண்ணெய்  உதவியாக இருக்கும். இவற்றில்  வைட்டமின் E உள்ளது, அது நகங்களுக்கு அதிக  ஊட்டச்சத்தை அளிக்கிறது, இது நகங்களை வேகமாகவும்  பொலிவாகவும் வளரச்செய்கிறது.

ஆரஞ்சு சாற்றை 10 நிமிடங்களுக்கு நகங்களில்  தடவி மசாஜ் செய்ய வேண்டும் . அதன்  பிறகு, மிதமான சூடு தண்ணீரில் கைகளைக் கழுவவும். இதை தொடர்ந்து சில தினங்கள் செய்வதன் மூலம்,  நகங்கள் வேகமாக  வளரும்.ஆரஞ்சு சாப்பிட்டால், நகங்கள் விரைவாக வளரும் எனவும் கூறுகின்றனர்

.உங்கள் நகங்கத்தின்  நீளத்தினை கூடுதலாக்க  பூண்டு மொட்டுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பூண்டு மொட்டுகளை நடுத்தரத்திலிருந்து வெட்டி நகங்களில் தேய்க்கவும். இந்த செய்முறையை நீங்கள் தினமும் நல்  இரவில் செய்தால், உங்களுக்கு அதிக நன்மை உண்டாகும் . தினம் இரவு சில சமையம் என ஒரு சில நாட்களுக்கு தொடர்ந்து பூண்டு தடவினால் நகங்கள் வேகமாக  வளர தொடங்கும் .

ஒரு பாத்திரத்தில் மிதமான தண்ணீரில் எலுமிச்சை சாறு ஒரு சில துளிகள் விட்டு. அதில்  உங்கள் விரல்களை 10 நிமிடங்கள் அந்த நீரில் விடவும். பின்  குளிர்ந்த நீரில் கைகளை வைக்கவும். எலுமிச்சை சாற்றில் உள்ள அமிலம் உங்கள் நகங்களுக்கு கூடுதல் சக்தி அளிக்கும்.

Categories

Tech |