இந்தியன் 2 குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வந்தது. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விபத்து மற்றும் கொரோனா காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இந்நிலையில் விக்ரம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். இதனையடுத்து காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிக்கவில்லை என சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக காஜல் அகர்வால் தன்னுடைய இணையதள பக்கத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் வருகிற செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என பதிவிட்டுள்ளார். இதன் மூலம் காஜல் அகர்வால் இந்தியன் 2 திரைப்படத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.