Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“மல்லூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி இரும்பு வியாபாரி தற்கொலை மிரட்டல்”…. தடுத்து நிறுத்திய போலீஸ்சார்….!!!!!

மல்லூரில் செல்போன் கோபுரம் மீது ஏறி இரும்பு வியாபாரி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள மல்லூரில் இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் குப்பன். இவரின் மகன் ராமு. இவர்  அப்பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருகின்றார். இந்நிலையில் ராமுவுக்கும் அவரின் அத்தை மகன் ராஜா என்பவருக்கும் பூர்வீக சொந்தமான வீடு சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்திருக்கின்றது. இதில் நீதிமன்றத்தில் வீடு ராஜாவிற்கு சொந்தம் என தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதனால் அந்த வீட்டில் வசித்து வந்த ராமுவின் பெற்றோரை வீட்டை விட்டு காலி செய்யும்படி ராஜா கூறி இருக்கின்றார். அதனால் ஆத்திரமடைந்த ராமு வீட்டில் இருக்கும் தனது பெற்றோரை காலி செய்யக்கூடாது எனவும் வீடு தங்களுக்கு சொந்தம் எனக் கூறி அப்பகுதியில் இருக்கும் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார் ராமு. அதை பின்னர் போலீசார் ராமுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்.

Categories

Tech |