Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேடே..! செமையா பேசுறாரே… விவரத்தோடு அடுக்கிய எடப்பாடி…! கூர்ந்து கவனிக்கும் திமுக அரசு..!

செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, கனமழையின் காரணமாக மேட்டூர் அணை நிரம்பி சுமார் 2 லட்சம் கன அடிக்கு மேலாக மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் வெளியேறி காவிரியில் கரைபுரண்டு வெள்ளம் சென்று கொண்டிருக்கிறது. காவிரி கரையின் 2 பகுதிகளிலும் இருக்கிற கரையோர பகுதி…  தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்கள் அவர்களுடைய வீடுகளிலே வெள்ள நீர் புகுந்து கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர்.

கடந்த 5 நாட்களாக மேட்டூர் அணையில் இருந்து வெளியேறுகின்ற உபரி நீர் காவிரியிலேயயே சென்று கொண்டிருக்கிறது. இந்த வெள்ள நீர் கோமராபாளையம் பகுதி, பவானி பகுதி, பள்ளிவிளை பகுதி இன்னும் காவிரி கரை தாழ்வான பகுதிகளில் இருக்கின்ற வீடுகளில் வெள்ள நீர் புகுந்து கடுமையாக மக்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 278 வீடுகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதில் 754 நபர்கள் அந்த குடியிருப்பில் வசித்து வந்திருக்கிறார்கள். அவர்கள் 4 முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். அதேபோல பள்ளிவிளைப் பகுதியில் 328 குடியிருப்புகள் வெள்ளநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் 850 பேர் வசிக்கிறார்கள். இந்த 328 குடும்பங்களும் 4 முகாம்களில் தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

அதேபோல ஈரோடு மாவட்டம் பவானி நகர் பகுதியில் சுமார் 275 வீடுகள் வெள்ளம் சூழ்ந்து பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதில் சுமார் 800 நபர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் முகாம்களிலே தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள சந்திரபட்டியில் உள்ள 50 வீடுகளும், கொடுமுடி, இலுப்பு தோப்பு 40 வீடுகளும் வெள்ளநீர் சூழ்ந்து பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. அந்தப் பகுதியில் வருவாய் துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததால், மக்கள் அந்த வெள்ளநீரால் வீடுகளில் உள்ள உடைமைகள் எல்லாம் இன்றைக்கு வெள்ள நீரால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

அந்த குடும்பங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும், பாட புத்தகங்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது. இவர்களுக்கு இந்த அரசு புத்தகங்களும்,  நோட்டுகளும்,  நீரினால் மூழ்கியுள்ள அந்த உடைமைகளை அந்த குடும்பங்களுக்கு வழங்க வேண்டும் என்று நான் இந்த நேரத்திலே கோரிக்கையாக வைத்துக் கொள்கிறேன் என விவரத்தோடு பேசியதை, தமிழக அரசு நிச்சயம் கூர்ந்து கவனிக்கும் என அதிமுக நிர்வாகிகள் கருதுகின்றனர்.

Categories

Tech |