செய்தியாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்த காரணத்தினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்த அரசு எடுக்காத காரணத்தினாலே பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக செய்யாத காரணத்தினாலே… இன்றைக்கு கரையோர பகுதியில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதுவும் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களுக்கு முறையாக மருத்துவ வசதி கிடைக்கவில்லை. இப்போதுதான் ஒரு சில முகாம்களிலே மருத்துவ வசதி செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த முகாம்களிலே வசிக்கும் மக்களுக்கு கொசு தொல்லை அதிகமாக இருக்கிறது. அதையும் இந்த அரசு கவனித்து, கொசு மருந்து அடித்து அந்த முகாம்களிலே தங்கி இருக்கின்றவர்களுக்கு பாதுகாப்பான நடவடிக்கைகளை செய்து கொடுக்க வேண்டும்.
அதேபோல அரியலூர் மாவட்டம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுமார் 300 ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்ப்பயிர்கள் நீரிலே மூழ்கி விவசாயிகள் பெரு நஷ்டத்திற்கு உள்ளாகியுள்ளனர். இப்படி நீரில் மூழ்கி அந்த பயிர்கள் எல்லாம் சேதமடைந்து இருக்கிறது. நேரடியாக சம்பந்தப்பட்ட துறை சேர்ந்த அதிகாரிகளும், அமைச்சர்களும் நேரடியாக சென்று பார்வையிட்டு அந்த பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தேவையான நிவாரணம் வழங்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன்.
அதேபோல அந்த அரியலூர் மாவட்டத்தில் கோவிந்தபுத்தூர், அனைக்குடி, அரன்கோட்டை உட்பட்ட கிராமங்களில் தான் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி இருக்கின்றன. சேதம் அடைந்திருக்கின்றன. இதை உடனடியாக போர்க்கால அடிப்படையில் அரசு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும், அமைச்சர்களையும் அனுப்பி வைத்து அவர்களுக்கு தேவையான நிவாரணத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.