Categories
மாநில செய்திகள்

“முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள்” TRB வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு….!!!

ஆசிரியர் தேர்வு வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் பள்ளி மற்றும் கல்லூரியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை தேர்வு மூலமாக நிரப்பி வருகிறது. கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. இவர்களுக்கு கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 12 முதல் 20-ஆம் தேதி வரை தேர்வுகள் நடத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் 9-ம் தேதி உத்தேச விடை குறிப்புகள் வெளியிடப்பட்டது. இதற்கு 29 ஆயிரத்து 141 பேர் வாட்ஸப் மூலமாக ஆட்சேபனை தெரிவித்து இருந்தார்கள். இதன் காரணமாக பாடவாரியாக வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு விடை குறிப்புகள் மறுசீராய்வு செய்யும் பணி நடைபெற்றது.

இந்த விடை குறிப்புகள் கடந்த ஜூலை 4-ஆம் தேதி இணையதளத்தில் வெளியானது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி முன்பு நடத்தப்பட்ட தேர்வின் மூலம் கூடுதலாக முதுநிலை ஆசிரியர்களின் நியமிப்பதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கம்ப்யூட்டர் பயிற்றுநர் நிலை, உடற்கல்வி இயக்குனர் நிலை, முதுகலை ஆசிரியர் பணியிடங்கள நிரப்பப்பட இருக்கிறது. இதன் மூலம் 1030 பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் கூடுதலாக 3237 பணியிடங்கள் நிரப்பப்படும்.

Categories

Tech |