செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர், தவறான முறையில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆவின் பற்றி தவறாக பேசுகிறார்கள். அண்மையில் கூட பார்த்தீர்கள் என்றால் அண்ணன் ஆற்காடு வீராசாமி பற்றி தவறான ஒரு கருத்தை சொன்னார் அண்ணாமலை. நோட்டவை விட கம்மியா ஓட்டை வாங்கியவர்.
அதே மாதிரி சத்துமாவு நாங்கள் தயாரிக்கவே இல்லை, தயாரிக்கப் போகிறோம் அது உண்மை. அது செயல்பாட்டில் உள்ளது. அது முறைப்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் போய் சர்டிபிகேட் வாங்கி, மெடிக்கல் போய் பலவிதமான ஆய்வுகள் பிறகுதான் அந்த சத்துமாவு தயாரிக்க வேண்டும். தயாரிக்காத சத்துமாவை நம்முடைய சுகாதாரத்துறையினர் வெளியே வாங்கி விட்டார்கள் என்று சொல்லி தேவை இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டை சொல்லி அவர்,
நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் ஆக, இது போன்ற தவறான கருத்துக்களை உண்மைக்கு புறம்பான கருத்துக்களை சொல்லுவதே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். இப்படிப்பட்ட பொய் சொல்லுவது மக்களுக்கே தெரியும். வேண்டும். தினமும் ஒரு செய்தி வரவேண்டும். அதற்காக சொல்லிக் கொண்டிருக்கிறார். இது மொத்தம் மக்களுக்கு தெரியும் என தெரிவித்தார்.