ஒருமுறை கை தட்டினால் உடம்பில் இரண்டு சொட்டு ரத்தம் ஊறும் என அமைச்சர் செல்லூர் ராஜூ உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூரில் மத்திய கூட்டுறவு வங்கியின் கிளை திறப்பு விழாவில் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அங்கு கூடியிருந்தவர்களை கைதட்ட வைக்க, கை தட்டினால் சுறுசுறுப்பாக இருந்தால் அன்று முழுவதும் உடல் ஆரோக்கியமாக இருக்கும், ரத்த ஓட்டம் கூடும் என்றார்.
மேலும் ஒரு முறை கை தட்டினால் இரண்டு சொட்டு ரத்தம் ஊரும் என்று அவர் கூறியதோடு, கைதட்டி பாருங்கள் என்று கூறி அங்குள்ளவர்களிடம் கைத்தட்டு வாங்கினார். தொடர்ந்து பேசிய அவர், நான் உண்மையைத்தான் சொல்கிறேன். பொய்யே சொல்ல மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார். இவருடைய இந்த பேச்சை சமூக வலைதளங்களில் ஒரு சிலர் நக்கலாகவும் நையாண்டி தனத்துடனும் கேலிசெய்து பதிவிட்டு வருகின்றனர்.