Categories
சினிமா தமிழ் சினிமா

“மீண்டும் காதல் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா…?” சுவாரசியமான பதிலை தந்த சமந்தாவின் மாஜி கணவர்…!!!!!

உங்கள் வாழ்வில் மீண்டும் காதல் வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என நாக சைத்தன்யாவிடம் கேட்ட பொழுது சுவாரசியமான பதிலை கூறியுள்ளார்.

சமந்தாவும் நாக சைத்தன்யாவும் காதலித்து சென்ற 2017-ஆம் வருடம் திருமணம் செய்து கொண்டார்கள். இந்தநிலையில் சென்ற வருடம் இருவரும் விவாகரத்து செய்வதாக அறிவித்தார்கள். தற்போது மீண்டும் காதல் வந்தால் ஏற்பீர்களா என நாக சைத்தன்யாவிடம் கேட்கப்பட்ட பொழுது அதற்கு அவர் கூறியுள்ளதாவது, ஆமாம். யார் கண்டது? காதல் தான் நம்மை எல்லாம் இயக்குகின்றது. நாம் சுவாசிப்பது போன்று காதலும் நம் வாழ்க்கையில் முக்கியமான ஒன்று. நாம் காதலிக்க வேண்டும். அன்பை பெற வேண்டும். அதுதான் நம்மை ஆரோக்கியமாகவும் பாசிட்டிவானதாகவும் வைத்திருக்கும் என கூறியுள்ளார்.

சமந்தாவை பிரிந்த பிறகு நாக சைத்தன்யா நடிகை சோபிதாவை காதலிப்பதாக சொல்லப்படுகின்றது. முன்னதாக இது குறித்து அவரிடம் கேட்ட பொழுது இல்லை எனக் கூறினார். இருப்பினும் வெக்கப்பட்டார். இதனால் அவர் சோபிதாவை காதலிப்பது உண்மை என சொல்லப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |