Categories
சினிமா தமிழ் சினிமா

பாடலில் வரும் பணத்தை….. கோவிலுக்கு கொடுக்கும் பிரபல இசையமைப்பாளர்…!!!!

தேவா இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவரது பூர்வீகம் வேலூர் மாவட்டம், ஆற்காடு அருகிலுள்ள மாங்காடு கிராமமாகும். இவர் கடந்த இருபது வருடங்களாக இசைத் துறையில் பணியாற்றி வருகிறார். இவருடைய பாடல்கள் பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களில் அமைந்துள்ளது. தேவா பல கானா பாடல்களை எழுதியும், அந்தப் பாடலைத் தானே பாடியும் உள்ளார். இவருடைய கானா பாடல்கள் பெரும்பாலும் சென்னைத் தமிழில் இருக்கும். இவர் மேற்கத்திய இசைக் கருவிகளை கையாளும் திறன்படைத்த மாஸ்டர் தன்ராஜிடம் மேற்கத்திய இசையைப் பயின்றவர்.

இவர் தேனிசைத் தென்றல் என்று அழைக்கப்படுகிறார். இந்நிலையில் அண்மையில் தான் வெளியிட்ட ‘கந்த முகமே’ என்ற முருகனை பற்றிய பாடல் ஆல்பத்தின் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வழங்கப்போவதாக இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார். 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, தற்போது பக்தி பாடல்களுக்கு இசையமைத்து ஆல்பமாக வெளியிட்டு வருகிறார்.

Categories

Tech |