Categories
தேசிய செய்திகள்

சூப்பர் ஆப்பர்…. வீட்ல இருக்க காலி பால் பாக்கெட்டை கொடுத்தா…. பெட்ரோல் விலை தள்ளுபடி….. அசத்தல் அறிவிப்பு….!!!

நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் காலி பால் பாக்கெட் கொடுத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தள்ளுபடிகள் வழங்கப்படும் என்று பெட்ரோல் நிலையம் ஆஃபர் ஒன்றை அறிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புல்வாரா என்ற பகுதியில் அசோக்குமார் முத்ரா என்பவர் பெட்ரோல் நிலையம் ஒன்றை நடத்தி வருகிறார். அவர் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக விழிப்புணர்வு முகாம் நடத்த தொடங்கியுள்ளார்.

அதற்காக சராஸ் டைரி நிறுவனம், பில்வாரா மாவட்ட நிர்வாகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உதவியுடன் இந்த சலுகையை அவர் அறிவித்துள்ளார். அதன்படி காலி பால் பாக்கெட்டுகளை கொடுத்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தள்ளுபடி வழங்கப்படும்.ஒரு காலி பால் பாக்கெட் கொடுத்தாள் பெட்ரோல் விலையில் ஒரு ரூபாயும் டீசல் விலையில் 50 பைசாவும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Categories

Tech |