கோவை மாவட்டம் சூலூரை அடுத்த அப்பநாயக்கன் பட்டியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் பதுக்கிவைத்து விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் அப்பகுதியில் புகையிலை பொருட்களை பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து சூலூர் சிந்தாமணிபுதூர் பகுதியை சேர்ந்த பொன்ரமேஷ் (47), கண்ணம்பாளையம் பகுதியை சேர்ந்த கண்ணன் (37) மற்றும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் (42) ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 250கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் மற்றும் 2 நான்குசக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.