அரியானாவில் நூக் மாவட்டத்தில் சட்டவிரோத வகையில் நடந்து வந்த சுங்க பணிகளை விசாரிக்க சென்ற துணை போலிஸ் சூப்பிரண்டு சுரேந்திர சிங் பிஷ்னோய் என்பவர் கடந்த ஜூலை 19ஆம் தேதி லாரி ஏற்றிக்கொள்ளப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து டி.எஸ்.பி.யின் குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி இழப்பீடு மற்றும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் கட்டார் அறிவித்தார். அது மட்டுமில்லாமல் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார் என்றும் குற்றவாளி ஒருவர் கூட தப்ப முடியாது என்று அவர் கூறினார். இந்நிலையில் ராஜஸ்தானில் சுங்க மாபியா கும்பல் தனது கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் லாரி ஏற்றி செல்ல முயற்சித்தது என பாஜக எம்.பி. ரஞ்சித் கோலி பரபரப்பு குற்றசாட்டு கூறியுள்ளார். இதனையடுத்து தனது புகார் குறித்து போலீசார் எந்தவித கவனமும் செலுத்தவில்லை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் கட்சியினர் மற்றும் உள்ளூர் மக்களும் இணைந்து கொண்டனர்.
இது குறித்து எம்.பி. கோலி கூறியது, 150 லாரிகள் அதிக அளவு பாரம் ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அதனை கவனித்த நான் அவற்றின் நிறுத்த முயன்றேன். ஆனால் அவர்கள் தப்பிவிட்டனர். காரில் நான் இருக்கிறேன் என்று நினைத்து கார் மீது கற்களை வீசினர். இதில் காரின் கண்ணாடிகள் உடைந்து விட்டது. அவர்கள் என்னை கொலை கூட செய்திருக்கலாம். இது என் மீது நடத்தப்பட்ட தாக்குதல். ஆனால் இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன் என்று அவர் கூறினார். அதனைத் தொடர்ந்து இதுகுறித்து உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆர்.எஸ். காவியா கூறியது, அந்த எம்.பி இரவில் எங்களை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, டெல்லியில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது அதிக சுமை ஏற்றிக்கொண்டு வந்த லாரிகலை பார்த்த அவர், அவற்றை நிறுத்தம் முயற்சித்துள்ளார். அதில் 3 லாரிகள் சென்றுவிட்டது. இதனையடுத்து தப்பி செல்லும் போது கார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திவிட்டு சென்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என்று அவர் கூறியுள்ளார். மேலும் பாஜக பெண் எம்பி மீது கடந்த மே மாதம் மற்றும் கடந்த வருடம் இது போன்ற பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.