அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றியவர் லெப்டினன்ட் கர்னல் அலெக்ஸாண்டர் விண்ட்மேன். இவர் உக்ரைன் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தில் ட்ரம்புக்கு எதிராக பதிலளித்தவர்.
இந்த நிலையில் அவரை வெள்ளை மாளிகை பணிநீக்கம் செய்துள்ளது. இதுபற்றி பேசிய விண்ட்மேன் வழக்குரைஞர், “இது ட்ரம்பின் பழிவாங்கும் நடவடிக்கை” என விமர்சித்துள்ளார். சர்ச்சைகளின் அதிபரான ட்ரம்ப், பதவி நீக்க தீர்மானத்தில் சிக்கிய அமெரிக்க அதிபர் என்ற மோசமான சாதனையையும் செய்துள்ளார்.
இதற்கிடையில் ட்வீட்டரில் விண்ட்மேனை திட்டி ட்ரம்ப் ட்வீட் ஒன்றை செய்துள்ளார். அந்த ட்வீட்டில், “விண்ட்மேனை எனக்கு தெரியாது. நான் அவரை பார்த்தது கூட கிடையாது. அவரிடம் நான் பேசியதும் இல்லை. அவரை சந்தித்ததும் கிடையாது.ஆனால் அவர் ஒரு கீழ்த்தரமானவர். ஆதலால் அவர் வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார். ஆக விண்ட்மேன் பதவி பறிக்கப்பட்டுள்ளது.