ராஜ குரு,பகத்சிங்,சுகதேவ் போன்ற சுதந்திரபோராட்ட வீரர்களின் பெயர்களானது மிகவும் தெரிந்தவை என்றாலும் கூட சிவராம் ராஜ குரு மற்ற இரண்டு பேரை காட்டிலும் பெரியதாக அறியப்படவில்லை என்பது தான் உண்மையாகும். கடந்த 1908ம் வருடம் ஆகஸ்ட் 24-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே மாவட்டத்தில் கேடா எனும் கிராமத்தில் சிவராம் ராஜகுரு பிறந்தார். இவர் அவர்கள் 2 பேருடன் இணைந்து பிரித்தானிய இந்திய அரசை எதிர்த்துப் போராடிய மகாராஷ்டிராவை சேர்ந்த புரட்சிவீரர் ஆவார்.
இதில் ராஜகுரு காந்திஜியின் அகிம்சைப்போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளவில்லை. இதன் காரணமாக அவர் ஆங்கிலேயருக்கு எதிரான ஆயுத மேந்திய குழுவில் இணைந்தார். இதற்கிடையில் ராஜ குரு பகத்சிங்கின் ஹிந்துஸ் தான் சோசலிஸ்ட் குடியரசுக் கட்சியில் சேர்ந்தார். பகத்சிங் மற்றும் ராஜகுரு போன்ற தேசியவாதிகள் தங்களது மாவீரன் லாலா லஜபதிராயின் மரணத்தால் கோபமடைந்தனர்.
சைமன் கமிஷனுக்கு எதிரான கண்டனம் பேரணியை வழி நடத்திச் சென்ற ராய்க்கு எதிராக காவல்துறையினரின் தடியடிகளை வாங்கினர். பின் ராஜ குரு, பகத்சிங் மற்றும் சுக தேவ் போன்றோருடன் இணைந்து, ராயின் மரணத்துக்கு பழிவாங்குவதற்கு ஜான்சாண்டர்ஸ் எனும் காவல் அதிகாரியை கொலை செய்தார் என்பது கவனிக்கத்தக்கது. அதன்பின் காவல்துறை அதிகாரியை கொலைசெய்த வழக்கில் இந்திய பிரித்தானிய நீதிமன்றம் பகத்சிங் ,ராஜகுரு மற்றும் சுகதேவ் ஆகிய 3 நபர்களுக்கும் தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
இந்த நிலையில் இவர்களுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பின்படி, கடந்த 1931-ம் வருடம் மார்ச் 23ஆம் தேதி 3 பேருக்கும் ஒரே நாளில் இந்திய பாகிஸ்தான் எல்லைப் பகுதியான உசைனி வாலா கிராமத்தில் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இவர்களின் உடல்கள் பஞ்சாப் பெரோசாபூர் மாவட்டம், சட்லஜ் என்ற பகுதியில் எரியூட்டப்பட்டது.