தமிழகத்திலுள்ள எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள், உள் கட்டமைமப்பு வசதி இருக்கிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணை வரும் 27-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ்சந்திரன் தொடர்ந்த வழக்கில், தமிழகத்தில் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு அரங்குகள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதி இருக்கிறது என ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் விதமாக விதிகள் வகுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வரநாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு தமிழ்நாடு அரசுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.