லண்டனில் வியாழக்கிழமை இஸ்லிங்டனில் உள்ள பூங்காவில் 15 வயதில் சிறுவன் கத்தியால் குத்தப்பட்டு சம்பவ இடத்திலே பலியாகினார். இந்நிலையில் கிழக்கு லண்டனில் சனிக்கிழமை பிற்பகல் 2.15 மணிக்கு குலாம் சாதிக் என்ற 18 வயது இளைஞர் வாழ் வெட்டுப்பட்டு கிடந்தார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விவகாரம் குறித்து போலீசார் இதுவரை கைது நடவடிக்கை எதுவும் முன்னெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட குலாம் சாதி குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. மேலும் சிறப்பு அதிகாரிகள் அவர்களுக்கு உதவுவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறியது, உடற்கூறு ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களில் மட்டும் லண்டன் நகரில் வாழ்வெட்டு சம்பவத்தில் 5 பேர் பலியாகி உள்ளனர். குலாம் வழக்கில் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள மக்கள் போலீசருக்கு உதவ முன் வர வேண்டும் என்றும் தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் தொடர்பில் தகவல் தெரியவரும் மக்கள் விசாரணை அதிகாரிகளின் நாடவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரித்தானியாவில் 2022 மார்ச் மாதம் வரையில் மொத்தம் 6.3 மில்லியன் குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.