நேரடியாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர் அதாவது செய்தி மக்கள் தொடர்பு பணியாளர்களின் நியமிக்கும் முறை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுவரை இருந்த நேரடி நியமனத்திற்கு பதில் டிஎன்பிஎஸ்சி மூலமாக நியமிக்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. உதவி மக்கள் தொடர்பு அலுவலர் காலி பணியிடங்களில் 50% இடங்கள் பதவி உயர்வு மற்றும் பணி மாறுதலில் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு படித்து வருபவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.