Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தோழியின் வீட்டிற்கு அழைத்து சென்ற தாய்…. நீச்சல் குளத்தில் மூழ்கி பலியான சிறுமி…. பரபரப்பு சம்பவம்…!!

நீச்சல் குளத்தில் மூழ்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் பானு நகர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு தனன்யா(8) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவருடன் கனுஷியா என்ற சிறுமியும் படித்து வந்துள்ளார். அப்போது கனினுஷியாவின் தாயாருடன் கண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கனுஷ்யாவின் தாய் கண்மணியை தனது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். இதனால் கண்மணி தனது மகளுடன் கனுஷியாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் கண்மணியும், கனுஷியாவின் தாயரும் பேசி கொண்டிருந்த போது சிறுமிகள் அங்கிருந்த நீச்சல் குளத்தில் குளித்து விளையாடி கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தனன்யா தண்ணீரில் மூழ்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு தனன்யாவை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |