Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பெரும் பரபரப்பு!!…. பாதி எரிந்த நிலையில் கிடந்த ஆண் பிணம்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!!

பாதி எரிந்த நிலையில் கிடந்த வாலிபரின் சடத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஏலாச்சேரி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள விவசாய நிலம் வழியாக நேற்று சிலர் வேலைக்கு சென்றுள்ளனர். அப்போது ஒரு வேர்க்கடலை பயிரிடப்பட்டுள்ள தோட்டத்தில் வாலிபர்  ஒருவரின் பிணம் பாதி  எரிந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் கோகுலராமனிடம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோகுலராமன் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எரிந்து கிடந்த அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பிணமாக கிடந்த வாலிபர் யார்? எப்படி இறந்தார்?  என்று   பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |