நாவல் பழம் பறித்த காவலாளி மரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்திலுள்ள வள்ளலார் பிள்ளையார் கோவில் தெருவில் ரகுநாதன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மீனா என்ற மனைவியும், 1 வயதில் ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் ரகுநாதன் வள்ளலார் டபுள்ரோட்டின் நடுவே உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழங்கள் பறித்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராவிதமாக மரக்கிளை ஒன்று முறிந்ததில் ரகுநாதன் தவறி கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தலையில் பலத்த காயமடைந்த ரகுநாதனை உடனடியாக மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ரகுநாதனை பரிசோதிதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சத்துவாச்சாரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.