சாலையோர புதரில் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
நாகர்கோவில் கன்னியாகுமாரி இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் சுசீந்திரத்தை அடுத்துள்ள கரியமாணிக்கப்புரம் பகுதியில் ரெயிவே பாலத்தின் சாலையோரம் இருக்கும் புதருக்குள் எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடந்துள்ளது. இதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ்சார் எரிந்த நிலையில் கிடந்த உடலை பார்வையிட்டார்கள்.
மேலும் அவருக்கு சுமார் 50 வயது இருக்கும். பெட்ரோல் ஊற்றி தீ வைத்திருப்பதாக தெரிகின்றது. மேலும் மர்ம நபர்கள் இறந்தவரை வேறு பகுதியில் கொன்று உடலை சாலையோரம் உள்ள பூதரில் வீசி எரித்து இருக்கலாம் என போலீசார் கருதுகின்றார்கள்.
இதனால் சம்பவ இடத்திற்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. ஆனால் மோப்ப நாய் சோதனையில் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இவ்வழக்கில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்ட தீவிர விசாரணை நடந்து வருகின்றது.