சென்னை பூந்தமல்லியை சேர்ந்தவர் சேகர் (40). கடந்த சில மாதங்களாக சேகரை அவரது மனைவி பிரிந்து அவரது அம்மா வீட்டில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு திரும்பி வந்த சேகரின் மனைவி, வீட்டிலிருந்த பீரோவை சோதனை செய்தார். அப்போது அதிலிருந்த அவரது 300 சவரன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இது குறித்து கணவரின் தம்பி ராஜேஷ் மற்றும் மாமியாரிடம் கேட்டபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. பின்னர் அவர்கள் பீரோவை சோதனை செய்த போது, தாயின் 200 சவரன் நகையும், 5 தங்க கட்டிகளும் காணாமல் போனதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து அவர்கள் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் விசாரணைதில் சேகர் அவற்றை விற்று தனது பெண் தோழிக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தது தெரிய வந்தது. வேளச்சேரி கேசரிபுரத்தை சேர்ந்த ஸ்வாதி(22) என்ற பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தில் அடிக்கடி சந்தித்து கொண்டு கார் வாங்கி கொடுத்ததை அவரே ஒப்புகொண்டார்.