Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கன்னி ராசிக்கு..கூடுதல் லாபம் தொழிலில் ஏற்படும்.. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள்..!!

கன்னிராசி அன்பர்களே, இன்று கூடுதல் லாபம் தொழிலில் கிடைக்கும், நாளாகவே இருக்கும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். பிள்ளைகளால் உதிரி வருமானம் வந்து சேரும். இடம், பூமி வாங்கும் முயற்சி கைகூடும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். இன்று  உங்களது செயல்களால் மற்றவர்களிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும்.

விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிலும் தயக்கமும் பயமும் இல்லாமல் ஈடுபடுவீர்கள். தந்தை மூலம் உங்களுக்கு முழுமையான உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானமும் உயரும். சகோதரர் வழியில்  ஒற்றுமை ஏற்படும். இன்றைய நாள் ஒரு பொன்னான நாளாக அமையும் .

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகவே கிடைக்கும். இன்று  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.

அதுமட்டுமில்லாமல் இன்று  முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீலம் நிறம்

Categories

Tech |