ஓடும் பேருந்தில் பயணம் செய்தவரிடம் இருந்து பணத்தை திருடிய இருவரை காவல்துறையினர் கைது செய்தனர்
ஈரோடு மாவட்டம் கருங்கள்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவர் ஈரோடு செல்வதற்காக தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அவர் பயணித்த பேருந்து காவிரி ரோட்டில் சென்று கொண்டிருந்த பொழுது கருப்பையாவின் பின்புறம் நின்ற 2 மர்ம நபர்கள் திடீரென கருப்பையாவின் பாக்கெட்டிலிருந்து 1000 ரூபாயைய் எடுத்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அதிர்ச்சியடைந்த கருப்பையா திருடன்.. திருடன்.. என அலறி உள்ளார்.
பேருந்தில் இருந்த சகபயணிகள் ஓட்டம் பிடித்த மர்ம நபர்களை மடக்கிப்பிடித்து கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருட்டில் ஈடுபட்டவர்கள் பூபதி மற்றும் கருணைநாதன் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து கருங்கல்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்துள்ளனர் மற்றும் அவர்களிடமிருந்தபணத்தையும் பறிமுதல் செய்தனர்.