டெல்லியில் 1971 ஆம் ஆண்டு செப்டம்பர் 3ஆம் தேதி கிரண் தேசாய் பிறந்தார். இவரின் அம்மா புகழ் பெற்ற எழுத்தாளர் அனிதா தேசாய். இவர் 1975 சாகித்திய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர். இவரது நாவல்கள் படங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 15 வயது வரை இந்தியாவில் வாழ்ந்த கிரன் தேசாய் குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்ததால் கல்லூரி இளநிலை படிப்பையும், முதுநிலை படிப்புகளையும் அவர் அங்கு தான் படித்தார். இவருக்கு அம்மாவை போலவே இருக்கும் எழுத்தின் மீது தீராக்கத்தால் 27 வயதில் முதல் நாவலை 1998-ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்த முதல் நாவல் விருதுகளை குவித்தது. அதன்பிறகு 2006 ஆம் ஆண்டு தனது இரண்டாவது புத்தகமானது ‘தி இன்ஹெரிடென்ஸ் ஆஃப் லாஸ்’ வெளியிட்டார். அந்த நாவல் எழுத்தாளர்களுக்கு வழங்கப்படும் உலகின் மிகப்பெரிய விருதான ‘புக்கர்’ பரிசை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தார்.
அதனை தொடர்ந்து கடந்த 2006 ஆம் ஆண்டு எழுத்தாளர்களின் புக்கர் பரிசுக்கான உலகின் ஒட்டுமொத்த ஆங்கில நாவல்களும் போட்டியிட்டது. அப்போது 35 வயதான கிரண் தேசாய் இரண்டாவது நாவலிலே அந்த பரிசை வென்று எழுத்து உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தார். ஆனால் இவரது அம்மா அனிதா தேசாய் இதுவரை மூன்று முறை போட்டியிட்டும் கிடைக்காத புக்கர் பரிசு அவரது மகளுக்கு கிடைத்தது. திறன் தேசாய்க்கு பிறகு இந்திய பெண் எழுத்தாளர்கள் யாருக்கும் புத்தர் பரிசு இன்னும் கிடைக்கவில்லை. இதனையடுத்து 1968 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட புக்கர் பரிசை முதல் முதலில் வெற்றி இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர் வி.எஸ்.நேபால்(1971), 2 வது சல்மான் ருஷ்டி(2981), 3 வது அருந்ததி ராய்(1997), 4 வது கிரண் தேசாய், 5 வது அரவிந்த் அடிகா ஆகிய 5 பேர் தான் இவ்விருதே பெற்றுள்ளனர். மேலும் வெற்றி பெறும் எழுத்தாளர்களுக்கு 65 ஆயிரம் டாலர் பரிசாக வழங்கப்படுகிறது.