Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மத்திய அரசை கண்டித்து…. போராட்டத்தில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர்கள்…. நாகையில் பரபரப்பு….!!

மத்திய அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பினர் நாகை மாவட்ட தமிழ்நாடு சட்டையப்பர் கீழ வீதியில் உள்ள மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நாடாளுமன்றத்தில் மின்சாரத்துறையை தனியார் மயமாக்கும் மின் திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து நடைபெற்றது.

இந்த போராட்டம் வட்டார தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமான மின்வாரிய ஊழியர்கள் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Categories

Tech |