சிம்மம் ராசி அன்பர்களே, இன்று முருகன் வழிபாட்டால் சிந்தனைகளில் வெற்றிபெறும் நாளாகவே இருக்கும். கைமாற்றாக, கடனாக கொடுத்த தொகை திரும்ப கிடைக்கும். நிர்வாகத் திறமைகள் பளிச்சிடும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்து கொள்வீர்கள். இன்று கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.
வாழ்க்கை துணையின் மூலம் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தினருடன் புண்ணிய ஸ்தலங்களுக்கு செல்வீர்கள். ஆன்மீக எண்ணம் கூடும். உங்கள் பொருட்களின் மீது கவனமாக இருங்கள். உங்களுடைய சாதுர்யமான செயல்களால் லாபம் இன்று உண்டாகும்.
உங்களுடைய வசீகரமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாக இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றியில் இருக்கும். இன்று காதல் கைகூடும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். இன்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகி செல்லும்.
மேற்கல்வி காணும் முயற்சியில் வெற்றி வாய்ப்புகள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை முறையாக கையாளுங்கள். உங்களுடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் இளம் மஞ்சள் நிறம்