Categories
மாநில செய்திகள்

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 9) போக்குவரத்து மாற்றம்…. வாகன ஓட்டிகளுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நிறைவு விழா நேரு ஒரு விளையாட்டு அரங்கில் இன்று  நடைபெற உள்ளது. அதனால் சென்னையில் இன்று  போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. எனவே தினமும் மூன்று மணி முதல் இரவு 9 மணி வரையில் ராஜா முத்தையா சாலை, ஈவேரா பெரியார் சாலை, சென்ட்ரல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

அதன் காரணமாக மதியம் ஒரு மணி முதல் சூளை நெடுஞ்சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் ராஜா முத்தையா சாலை வழியாக செல்வதற்கு அனுமதி கிடையாது.அதனைப் போலவே இவிக சம்பத் சாலை மற்றும் ஜெர்மயா சாலை சந்திப்பிலிருந்து ராஜா முத்தையா சாலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. வணிக நோக்கிலான வாகனங்கள் ஈவேரா சாலை, செங்குரொட்டி சாலை சந்திப்பு,நாயர் பால சந்திப்பு மற்றும் காந்தி இரவின் சந்திப்பில் இருந்து சென்ட்ரல் நோக்கி செல்ல அனுமதி கிடையாது. எனவே வாகன ஓட்டிகள் இந்த சாலை வழித்தடங்களை தவிர்த்து பிற வழித்தடங்களை பயன்படுத்த போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |