நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் தமிழக முழுவதும் ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தங்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்ற பள்ளி மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் தெரியப்படுத்த வேண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
நாட்டின் 75 வது சுதந்திர தின நிறைவு விழாவை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் அறிவுறுத்தலை மேற்கோள் காட்டி இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.எனவே தமிழக முழுவதும் பள்ளி மாணவர்கள் மூன்று நாட்களுக்கு அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.