Categories
சினிமா தமிழ் சினிமா

“நிரூபிக்க வேண்டும்” சினேகன் மீது பிரபல நடிகை குற்றச்சாட்டு….!!!!

கவிஞர் சினேகன் தனது அறக்கட்டளையின் பெயரில் போலியாக சமூக வலைதளங்கள் தொடங்கி சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி பண வசூல் செய்து வருவதாக சென்னை காவல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் பண மோசடி செய்ததாக பிரபல பாடலாசிரியர் சினேகன் கொடுத்த புகாருக்கு நடிகை ஜெயலட்சுமி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் “எந்த இடத்திலும் சினேகன் பெயரைப் பயன்படுத்தி நன்கொடை வாங்கவில்லை. நான் பணம் பெற்றுள்ளதாக கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், சினேகன் தன்னை தவறாகச் சித்தரிக்கும் நோக்கில் இதுபோன்ற புகார் அளித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |