வயதான காலத்தில் சிரமப்படாமல் இருக்க பென்ஷன் உள்ளிட்ட ஓய்வு கால வருமானத்திற்கு திட்டமிடுவது நல்லது. அதன்படி அமைப்புசாரா துறையை சேர்ந்த தொழிலாளர்கள் பென்ஷன் பெறுவதற்காக பிரதமர் ஷ்ரம் யோகி மந்தன் யோஜனா திட்டத்தை மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் கணவன் மனைவி இருவருக்கும் 200 ரூபாய் முதலீட்டில் 72 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பெற முடியும்.
இதில் மாதம் தோறும் 200 ரூபாய் மட்டும் முதலீடு செய்து வந்தால் மட்டுமே போதும். 18 முதல் 40 வயது வரையிலானவர்கள் மாதம் 15 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் பெறும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.இந்த திட்டத்தில் பயனாளிகள் 60 வயதை தொட்ட பிறகு மாதம்தோறும் 3 ஆயிரம் ரூபாய் பென்ஷன் அவர்களுக்கு கிடைக்கும்.
அதாவது வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய் பென்ஷன்.இந்த திட்டத்தில் பென்ஷன் பெரும் காலத்தில் பயனாளி உயிரிழந்து விட்டால் அவரது கணவர் அல்லது மனைவிக்கு 50 சதவீதம் பென்ஷன் தொகை குடும்ப பென்ஷன் ஆக வழங்கப்படும்.இதில் முதலீடு செய்ய விரும்பினால் அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்று கணக்கை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.