சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் ஆலந்தூர் மெட்ரோ அருகே இருக்கக்கூடிய ராட்சத சாலை வழிகாட்டி பலகை திடீரென பெயர்ந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், சாலையில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ, இருசக்கர வாகனம் மீது விழுந்ததில் ஒருவர் இறந்த நிலையில், இரண்டு பேர் காயமடைந்தனர்.
இந்நிலையில் வழிகாட்டி பலகை விழுந்து விபத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசிடம் ஓபிஎஸ் கோரிக்கை வைத்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு வேதனை அளிப்பதாக கூறிய அவர் இதுபோன்ற நிகழ்வு மேலும் நடைபெறாமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் சுய நினைவோடு வாகனங்களை ஓட்ட வேண்டும் என்று ஓட்டுநர்களை அறிவுறுத்தி உள்ளார்.