நயன்தாரா தான் நடிக்கும் 75ஆவது திரைப்படத்திற்கு 10 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. இவர் தற்பொழுது புதுமுக இயக்குனர் நிலேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75 ஆவது திரைப்படத்தில் நடிக்கின்றார். இத்திரைப்படத்தின் பூஜை அண்மையில் போடப்பட்டது. இத்திரைப்படத்தில் நடிகர் ஜெய் நடிக்கின்றார். நிலேஷ் கிருஷ்ணா இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இப்படத்தில் நடிப்பதற்கு நயன்தாரா பத்து கோடி சம்பளம் கேட்டதாகவும் அதனை தயாரிப்பாளர் தர மறுத்ததாகவும் செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே 10 கோடி தான் சம்பளம் வாங்குகின்றார். மேலும் அவர் பட ப்ரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றார். ஆனால் நயன்தாரா தான் தயாரிக்கும் படங்களை தவிர்த்து மற்ற திரைப்படங்களின் பிரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. இதனால் அவருக்கு 10 கோடி சம்பளம் தர முடியாது என இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் கூறிவிட்டாராம். இதனால் நயன்தாரா கவலையில் இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது.