Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையில் நடந்து சென்ற பெண்…. கைவரிசை காட்டிய வாலிபர்…. பின் நடந்த அதிரடி சம்பவம்….!!!!

சென்னை தியாகராய நகர் ராஜாச்சார் தெருவில் வசித்து வருபவர் காயத்ரி (45). இவர் நேற்று முன்தினம் மாலை 6.20 மணி அளவில் தியாகராய நகர் வடக்கு உஸ்மான் சாலை வழியாக நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த 2 பேர் காயத்ரி கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்ப முயன்றனர். இதனால் காயத்ரி கூச்சலிட்டார். இதையடுத்து பொதுமக்கள் அந்த 2 பேரையும் மடக்கிப் பிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் 2 பேரையும் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பிடிப்பட்ட வாலிபர் கேரள மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த உமர்அலி இலியன்(19) என்பது தெரியவந்தது. அத்துடன் மற்றொரு நபர் 17 வயது சிறுவன் ஆவார். இதில் உமர் அலி இலியன் கைது செய்யப்பட்டார். அதன்பின் 17 வயது சிறுவன், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |