ரஷ்யா-உக்ரைன் ஒப்பந்தத்தின் கீழ் உக்ரைன் துறைமுகங்களிலிருந்து மேலும் 4 தானிய கப்பல்கள் நேற்று லெபனானுக்கு செல்கின்றது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக உலகில் 4.7 கோடி பேர் பசியால் வாடும் அபாயம் இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்துள்ளது. இதனை அடுத்து உக்ரைனிலிருந்து தானியக் கப்பல்களை கருங்கடல் வழியாக வெளிநாடுகளுக்கு அனுப்ப வழிவகை செய்யும் ஒப்பந்தம் ரஷ்யா-உக்ரைன் இடையே ஐ.நா. சபை மற்றும் துருக்கி முன்னிலையில் கடந்த மாதம் கையெழுத்தானது.
அதன்படி உக்ரைனிலிருந்து முதல்முறையாக உணவு தானிய கப்பல் லெபனானை நோக்கி கடந்த 1-ஆம் தேதி புறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான்கு கப்பல்கள் உக்ரைன் துறை முகங்களிலிருந்து நேற்று லெபனானுக்கு சென்றுள்ளது. மேலும் இதன் மூலம் பசியால் வாடும் 4.7 கோடி பேரின் துயரை துடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.