கோவை மாவட்ட அன்னூர் அருகில் உள்ள கரியாம்பாளையம் காலனியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நிதிஷ்குமார்(18). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் செடிகள் பராமரிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 6 ஆம் தேதி அன்று அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய நண்பர்களான கிருஷ்ணமூர்த்தி(22), தீனா(18), பிரவீன்(21), நிஷாந்த்(19) ஆகியருடன் ஈரோடு மாவட்ட பவானி சங்கர் அணை நீர்த்தேக்க பகுதியில் சுஜில்குட்டை கிராமத்தில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்றனர். அப்போது பவானிசாகர் அணை நிரம்பி உள்ளதால். அதன் நீர் தேக்கம் பகுதி கடல் போல் காட்சி அளித்தது. இதனால் அணை நீர் தேக்கப் பகுதியை பரிசலில் சென்று பார்வையிட விரும்பினர். அதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் பரிசலில் ஏறி அணையின் பகுதிக்கு சென்றனர். அப்போது பரிசலினை சுஜில்குட்டையை சேர்ந்த நாகராஜன் என்பவர் ஓட்டினார். மாலை 3:30 மணிக்குப் கரிமொக்கை என்ற இடத்தில் அருகில் சென்ற போது காற்று அதிகமாக வீசியது.
இதனால் நாகராஜ் ஓட்டி சென்ற பரிசல் திடீரென கவர்ந்து விபத்துக்குள்ளாது. இதனால் பரிசலில் இருந்த அனைவரும் அணை நீரில் விழுந்தனர். அப்போது மற்றொரு பரிசலில் வந்த அய்யாசாமி என்பவர் விரைந்து சென்று தண்ணீரில் நீச்சல் அடித்தபடி தத்தளித்துக் கொண்டிருந்த நிதிஷ்குமாரின் நண்பர்கள் 4 பேரையும் மீட்டு தன்னுடைய பரிசலில் ஏற்றினார். மேலும் பரிசல் ஓட்டி வந்த நாகராஜும் இந்த விபத்தில் உயிர் தப்பினார். ஆனால் நிதிஷ்குமார் மட்டும் தண்ணீரில் மூழ்கி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சுஜில்குட்டையை சேர்ந்த பொதுமக்கள் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று நீரில் மூழ்கிய நிதீஷ் குமாரை தேடினர். ஆனால் அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர. இதனை எடுத்து பவானிசாகர் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியை சேர்ந்த மீனவர்களுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.