Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“தீவிரவாத அமைப்பில் கைதான 2 வாலிபர்கள்”…. 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை….!!!!!!

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய வாலிபர் ஈரோட்டில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கடந்த 26 ஆம் தேதி ஈரோட்டில் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் மாநகராட்சி உட்பட மாணிக்கம் பாளையம் முனியப்பன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் அதிரடியாக நுழைந்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மகபூப் அலியின் மகன் ஆசிப் முசாப்தீன் என்பவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அவரிடம் இருந்து செல்போன்கள், டைரிகள், சிம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

மேலும் விசாரணையில் சர்வதேச தீவிரவாத அமைப்பான ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் ஆசிப் முசாப்தீனுக்கு தொடர்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட போலீஸ் சுப்ரண்ட் சசி மோகனிடம் என்.ஐ.ஏ  அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதனை தொடர்ந்து ஆசிப் முசாப்தீன்  மீது உபாசட்டம் உள்பட மொத்தம் பத்து பிரிவுகளின் கீழ் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றார்.

இந்த சூழலில் கைதான ஆசிப்  மீதான வழக்கு ஈரோடு மாவட்டம் முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. இந்த வழக்கில் ஆஜர்ப்படுத்துவதற்காக கோவை மத்திய சிறையில் இருந்து ஆசிப் முசாப்தீன் பலத்த போலீஸ் பாதுகாப்பு படையுடன் நேற்று ஈரோட்டுக்கு கோர்ட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது ஆசிப் முசாப்தீனிடம்  விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 5 நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என போலீஸ் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மேலும் மனுவின் மீது விசாரணை நடத்திய நீதிபதி மாலதி இரண்டு நாட்கள் போலீஸ்காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து ஆசிப் முசாப்தீனை  ரகசிய இடத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த விசாரணையின் முடிவில் தீவிரவாத அமைப்புடன் மேலும் யாருக்காவது தொடர்பிருக்கிறதா? ஏதாவது சதி வேலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதா போன்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |