நாமக்கல் மாவட்டத்தில் வடக்கு கொட்டாய் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஜெயா (29) என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது, தனக்கும் சிங்கானந்தபூரை சேர்ந்த மனோகரன் என்பவருடைய மகன் சேகருக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தை இல்லாததால் மனோகரன் அடிக்கடி தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாகவும் அந்த பெண் கூறியுள்ளார். மேலும் இது குறித்து கணவர் மற்றும் மாமியாரிடம் முறையிட்டால் மாற்றுத்திறனாளி என்று கூட பாராமல் அந்த பெண்ணை அடித்து துன்புறுத்தி உள்ளனர். அதனால் மூன்று மாதங்களாக தனது சொந்த ஊரில் வசித்து வந்த இவர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அங்கு நடவடிக்கை எடுக்காததால் தர்ணாவில் ஈடுபட்டார். இதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது .குழந்தை இல்லாத காரணத்தால் மாற்றுத்திறனாளி மருமகளிடம் மாமனாரே தவறாக நடந்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.