Categories
மாநில செய்திகள்

இந்த 2 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்கும் மழை…. 4 நாட்களுக்கு தொடரும்…. வானிலை மையம் தகவல்..!!

நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேற்கு திசை காற்று வேகம் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைப்பொழிவு அதிக அளவில் காணப்படுகிறது. இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய இரு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல வட தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரை இரண்டு நாட்களுக்கு லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் 13ஆம் தேதி வரை 4 நாட்களுக்கு கனமழை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |